Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

‘தவெக ஆட்சியில்தான் வடிகால் பணிகள் நிறைவு’

‘தவெக ஆட்சியில்தான் வடிகால் பணிகள் நிறைவு’

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில், முந்தைய ஆட்சியாளர்கள் செய்யத் தவறிய பணிகளை விரைவாகச் செய்து வருகிறோம்.

பகிரவும் WhatsApp Facebook

தவெக ஆட்சியில் தான் வெள்ளநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தின் வருவாயை அதிகரிப்பதற்குத் தேவையான துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெளிவாக விளக்கியுள்ளார். அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுக ஆட்சியில் வெள்ள நீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு, தற்போது தவெக பெயர் பெற்றுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். 

ஆட்சியில் இருக்கும்போது இத்தகைய பணிகளை மேற்கொள்வது அரசின் கடமை. கடந்த ஆட்சியில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில், முந்தைய ஆட்சியாளர்கள் செய்யத் தவறிய பணிகளை விரைவாகச் செய்து வருகிறோம்.

முதல்வர் குறித்து தேவையற்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதை திமுகவினர் முன்னெடுத்து வருகின்றனர். அரசியலில் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் வேறுவேறல்ல. அரசியலைப் பொறுத்தவரை இருவரும் ஒன்றுதான். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு தொடங்கியது
அடுத்த செய்தி
IAF, Drone Federation discuss unmanned systems roadmap

தொடர்புடைய செய்திகள்